fbpx
Connect with us

Cinemapettai

ஒரே நாளில் தமிழ் திரையுலகில் 10 படங்கள் ரிலீஸ்.. தியேட்டர்களை பிடிக்க கடும் போட்டி

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஒரே நாளில் தமிழ் திரையுலகில் 10 படங்கள் ரிலீஸ்.. தியேட்டர்களை பிடிக்க கடும் போட்டி

அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 10 தமிழ் திரைப்படங்கள் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தியேட்டர்களை பிடிப்பதில் கடும் போட்டி நிலவுகிறது.

காளிதாஸ், சாம்பியன், பரமு, விஜயன்(டப்பிங்), திருப்பதி சாமி குடும்பம், ஜுமாங்கி தி நெக்ஸ்ட் லெவல்(டப்பிங்), கேப்மாரி, மாமாங்கம்(டப்பிங்/12ம் தேதி), கருத்துக்களை பதிவு செய், சென்னை டூ பாங்காங் என 10 திரைப்படங்கள் அதாவது டிசம்பர் 13ம் தேதி (வெள்ளிக்கிழமை) ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் கேப்மாரி திரைப்படம் விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் நீண்ட இடைவெளிக்கு பின்னர் இயக்கி உள்ளார். ஜெய் கதாநாயகனாக நடித்துள்ளார். மாமாங்கம்’ மம்முட்டி நடித்த வரலாற்று கதை கொண்ட மலையாள திரைப்படம் ஆகும்.

காளிதாஸ் பரத் நடிப்பில் உருவாகி உள்ள படம் ஆகும். சூசீந்திரன் இயக்கத்தில் கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு சாம்பியன் திரைப்படம் உருவாகி உள்ளது. இதில் விஸ்வா என்பவர் ஹீரோவாக அறிமுகம் ஆகியுள்ளார்.

ராகுல் பரமஹம்சா இயக்கத்தில் கருத்துககளை பதிவு செய் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் சமூக வலைதளம் பெண்களை எப்படி மோசமாக பாதிக்கிறது என்பதை பற்றிய படம் ஆகும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top