சுக்மா: சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் படை வீரர்கள் இன்று அதிரடி தாக்குதலில் ஈடுபட்டனர். இத்தாக்குதலில் 10 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

சத்தீஷ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் நேற்று மாவோயிஸ்ட்டுகள் நடத்திய தாக்குதலில் 26 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த 4 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

அதிகம் படித்தவை:  நான் அனுபவித்த வேதனைகள்: தனுஷின் அம்மா உருக்கம்

இந்நிலையில் மாவோயிஸ்டுகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சுக்மா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் படை வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது வனப்பகுதியில் பதுங்கி இருந்த மாவோயிஸ்டுகள் மீது சிஆர்பிஎப் வீரர்கள் அதிரடி தாக்குதல் நடத்தினர்.

அதிகம் படித்தவை:  பிரபல நாயகியின் மகளிடம் தவறாக நடந்து கொண்ட நடிகர்- புகார் அளித்த நடிகை

இதில் 10 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர். மத்திய ரிசர்வ் படையின் புதிய தலைவராக ராஜிவ் ராய் பட்நாகர் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.