திங்கட்கிழமை, டிசம்பர் 9, 2024

ராயன் படத்தை தொடர்ந்து தனுஷ் கையில் இருக்கும் 10 படங்கள்.. SK உடன் மோத பம்பரமாக சுற்றும் குபேரன்

Dhanush Line up Movies: தனுசுக்கு இந்த ஆண்டு வெளிவந்த கேப்டன் மில்லர் படம் கலையான விமர்சனங்களை பெற்றாலும் ராயன் படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றுவிட்டது. அதிலும் 50வது படம் ஸ்பெஷலாக இருக்க வேண்டும் என்பதால் தனுஷ் இயக்கி எழுதி நடித்து வெற்றி பெற வைத்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து கிட்டத்தட்ட பத்து படங்கள் அடுத்தடுத்து வரிசையில் காத்துக் கொண்டிருக்கிறது.

இதற்கிடையில் இவருக்கு போட்டியாளராக தற்போது இருக்கும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த அமரன் படம் மக்களிடமும் பிரபலங்களிடமும் நல்ல வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வருகிறது. இதனால் போட்டி ரொம்பவே வலுவாகி போய்க் கொண்டிருப்பதால் எப்படியாவது சிவகார்த்திகேயனை விட வெற்றி பெற வேண்டும் என்று பம்பரமாக சுற்றி வருகிறார்.

அதனால் கிடைக்கிற சான்ஸ் மிஸ் பண்ண கூடாது என்பதற்காக வருகிற படங்கள் அனைத்திலும் கமிட் ஆகி கையில் 10 படங்களை வைத்திருக்கிறார். அந்த வகையில் மலையாள இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் நாகார்ஜுனவுடன் இணைந்து குபேரா என்ற படத்தில் கமிட் ஆகி இருக்கிறார். இப்படம் வருகிற 15 நவம்பர் ரிலீஸ் க்கு தயாராக இருப்பதாக தகவல் வெளியாயிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து தனுஷின் 52 வது படமாக தனுஷ், இயக்கி எழுதி நடிப்பில் உருவாகி இருக்கும் இட்லி கடை படத்தின் படப்பிடிப்பு போய்க்கொண்டிருக்கிறது. இதில் இவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்த வருகிறார். அடுத்ததாக இளையராஜாவின் பயோபிக் கதையில் நடித்து வருகிறார். இப்படத்தை கேப்டன் மில்லர் படத்தை எடுத்த இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கியிருக்கிறார்.

அடுத்ததாக இயக்குனர் ஆனந்த் இயக்கத்தில், தேரே இஷ்க் மெய்ன் என்னும் படத்தில் கமிட் ஆகி இருக்கிறார். இதனை அடுத்து போர் தொழில் படத்தை எடுத்த இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் படம் பண்ணுவதற்கு தனுஷ் கமிட்டாகி இருக்கிறார். அடுத்ததாக எச் வினோத் இயக்கத்தில் தனுஷ் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து லப்பர் பந்து படத்தை வெற்றிகரமாக கொடுத்த இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து அவருடன் கூட்டணி வைப்பதற்கு தயாராக இருக்கிறார். மேலும் மலையாளத்தில் மஞ்சுமால் பாய்ஸ் படத்தை வெற்றிகரமாக கொடுத்த இயக்குனருடனும் படம் பண்ணுவதற்கு கூட்டணி வைத்திருக்கிறார். அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படம் மாதிரி இன்னொரு படத்தையும் பண்ணுவதற்காக தயாராக இருக்கிறார்.

இதையெல்லாம் முடித்த கையோடு தனுஷின் 60-வது படத்தை மகாராஜா படத்தை எடுத்த இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் நடிப்பதற்கு பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருக்கிறது. இப்படி தன்னுடைய வெற்றியை தக்க வைத்துக் கொள்வதற்காக தொடர் வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர்களுடன் கூட்டணி வைப்பதற்கு தனுஷ் கமிட் ஆகி இருக்கிறார். இனி நிற்கக் கூட நேரமில்லாமல் பிசியாக ஒவ்வொரு படங்களில் நடித்து அடுத்தடுத்து வெற்றியை கொடுக்க தயாராகி இருக்கிறார்.

- Advertisement -

Trending News