மெர்சல் பற்றி நீங்கள் அறிந்த/அறிந்திடாத 10 விஷயங்கள். - Cinemapettai
Connect with us

Cinemapettai

மெர்சல் பற்றி நீங்கள் அறிந்த/அறிந்திடாத 10 விஷயங்கள்.

Entertainment | பொழுதுபோக்கு

மெர்சல் பற்றி நீங்கள் அறிந்த/அறிந்திடாத 10 விஷயங்கள்.

★ ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் அவர்களின் 100 வது படம் தான் மெர்சல். தேனாண்டாள் ஸ்டுடியோஸ் லிமிடெட் இதன் மேனேஜிங் டைரக்டர் முரளி ராமசாமி என்றால், அவரின் மனைவி ஹேமா ருக்மணி தான் நிறுவனத்தின் சி இ ஓ,  இப்படத்தின் தயாரிப்பாளரும் ஹேமா தான்.

★ட்ரேட் மார்க் ரெஜிஸ்டர் செய்யப்பட்ட முதல் தென் இந்திய மொழிப் படம்.யாரேனும்  மெர்சல் என்ற பெயரை கமற்சியல் லாபத்திற்கு பயன்படுத்தினால், அதில் சிறு பகுதியை தேனாண்டாள் ஸ்டுடியோஸிற்கு ராயல்டி உரிமையாக தர வேண்டும்.

★ட்விட்டரால் இமோஜி உருவாக்கப்பட்ட முதல் விஜய் படம்.

★50 நிமிடங்கள் வரும் பிளாஷ் பாக் கட்சியில் கிராமத்து கெட்டப்பில் தளபதி கலக்கியுள்ளாராம். மாஸ் படமாக இருந்தாலும், இந்த கெட்டப்பில் தன் நடிப்பால் அசத்தி உள்ளாராம் விஜய்.

★படத்தின் இரண்டு ஹீரோயின்களான காஜல் அகர்வால் மற்றும் சமந்தாவுடன் அவர் சேர்ந்து நடிக்கும் மூன்றாவது படம் இது.

காஜல் – துப்பாக்கி, ஜில்லா.

சமந்தா- கத்தி, தெறி.

★மிகவும் அப்பாவியான கல்யாணம் ஆண பெண்ணாக நடித்துள்ளாராம் நித்யா மேனன். மற்ற இரண்டு ஹீரோயின்களை விட இவர் ரோல் தான் ஹைலைட் என்று சொல்கிறார்கள்.

★கடந்த 2010ல் வடிவேலுடன்  சுறா படத்தில் இணைத்த விஜய்  இப்பொழுது 7 வருட இடைவெளிக்கு பின் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளார்.

★மாஜிக் சம்பந்தமான காட்சிகளை ஐரோப்பியாவில் படமாக்கினார்கள் படக்குழு. அங்கு விஜய் மூன்று உலக புகழ் பெற்ற மேஜிக் நிபுணர்களிடம் ட்ரைனிங் எடுத்துக்கொண்டாராம். மாசிடோனியாவின் கோகோ ரெகுயம் (Gogo Requiem), பல்கேரியாவின் டானி பெலெவ் (Dani Belev) மற்றும் கனடாவின் ராமன் சர்மா (Raman Sharma).

Raman Sharma

★படத்தில் மொத்தமாக 16 மேஜிக் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இதனை விஜய் அவர்களே செய்துள்ளார். எந்தக் காட்ச்சியிலும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மற்றும் டூப் பயன் படுத்தவில்லை. நாங்கள் கத்துக்கொள்ள எடுத்த நேரத்தை விட மிக குறைவான நேரத்தில் இவர் கற்றுவிட்டார் என்று படக்குழுவிடம் சொல்லி வியந்தாராம் ராமன் சர்மா.

★மெர்சல் டீஸர் வெளியாகி மிக சீக்கிரமாக 10 மில்லியன் வியூஸ் பெற்றது நாம் அறிந்ததே, எனினும் தற்போழுது  1 மில்லியன் லைக்ஸ் பெற்ற டீஸர் என்ற உலக சாதனையயை நேற்று படைத்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top