வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

கங்குவா படத்தின் 10 நாள் Box Office நிலவரம்.. எத்தனை கோடி வசூல் தெரியுமா? ஷாக்!

தமிழ் சினிமாவில் எத்தனையோ படங்கள் வெளியாகியிருந்தாலும் பல படங்கள் வெற்றியும், பல படங்கள் தோல்வியைத் தழுவி இருக்கின்றன. இதில் யாரும் விதிவிலக்கல்ல.

ஆனால், சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா இதுவரை அல்லா அளவுக்கு எதிர்மறை விமர்சனங்கள் வெளியானது அப்படகுழுவுக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சூர்யா நடிப்பில் சிவா இயக்கத்தில் கடந்த நவம்பர் 14 ஆம் தேதி வெளியான படம் கங்குவா. இப்படத்தில் திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லில் ஆகியோர் நடித்திருந்த நிலையில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்திருந்தார். ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார்.

இப்படம் வெளியாகும் முன்பே படக்குழுவினர் இப்படம் குறித்து ஓவர் ஹைப் ஏற்றிவிட்டதுதான் இப்படத்தின் எதிர்மறை விமர்சனங்கல் அதிகரிக்க காரணம் என பலரும் கூறி வருகின்றனர். முதல் நாளே ரசிகர்களும், சினிமா விமர்சகர்களும் நெகட்டிவ் ரிவியூ கொடுத்ததால் இப்படம் வசூல் பெரியளவில் பாதிக்கப்பட்டது.

குறிப்பாக அதிக சத்தம், வி.எஃப்.எக்ஸ் குறைபாடு, படத்தின் முதல் 30 நிமிடங்கள் இவையெல்லாம் குறையாக கூறப்பட்டாலும், சூர்யா ஒற்றை ஆளாக தோளில் இப்படத்தை சுமந்திருக்கிறார். இத்தனை கோடி பட்ஜெட்டில் படமெடுப்பதையும் சினிமாத்துறையினர் பாராட்டி வருகின்றனர்.

கங்குவா பட 10 நாள் வசூல் நிலவரம்

இந்த நிலையில் கங்குவா வெளியாகி 10 நாள்கள் ஆகும் நிலையில் இப்படம் உலகம் முழுவதும் ரூ.90 கோடிக்கு மேலும், இந்தியா அளவில் 66 கோடிக்கு மேல் வசூலித்திருப்பதாகவும்,தமிழ் நாட்டில் மட்டும் இப்படம் ரூ.36 கோடி வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகிறது.

இந்த நிலையில் இப்படத்தை பார்க்க வரும் ரசிகர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டதால் கர்நாடக மாநிலத்தில் உள்ள தியேட்டர்களில் கங்குவா படத்தை நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகிறது. ஒரு பான் இந்தியா படம் வெளியாகி 10 நாள்களில் அப்படம் தூக்கப்பட்டுள்ளது படக்குழுவினரையும் சூர்யா ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இப்படம் ரூ.2 ஆயிரம் கோடி வசூலிக்கும் என தயாரிப்பாளார் கூறியிருந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காதபடி இப்படம் வசூலில் ஏமாற்றத்தை தந்திருப்பதாக சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.


- Advertisement -

Trending News