முருங்கைக்கீரை சூப்பில் இருக்கும் 10 நன்மைகள்.. குழந்தைகளுக்கு இப்படி கூட கொடுக்கலாம்

10 benefits of drumstick soup: சில உணவுகளில் ஏகப்பட்ட மருத்துவ குணங்களும் சத்துக்கள் நிறைந்த முக்கியமான விஷயங்களும் இருக்கிறது என்று தெரிந்தும் நாம் அந்த உணவுகளை அலட்சியப்படுத்தி வருகிறோம். ஆனால் கண் கட்டப் பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போல் நாம் ஏதாவது நோயில் அவஸ்தைப்பட்டு வரும் பொழுது தான் அந்த உணவுகளை தேடி தேடி அலைந்து சாப்பிட ஆரம்பிப்போம். ஆனால் அதை கொஞ்சம் கொஞ்சமாக தவிர்த்து சத்தான ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு வந்தால் நிச்சயம் வாழ்நாள் முழுவதும் நிறைவான வாழ்க்கையை வாழலாம்.

அப்படி சத்தான உணவுகளில் மிகச் சிறந்தது முருங்கைக்கீரை. இதை பொறியல் பண்ணி வாரம் இரண்டு முறை கூட சாப்பிடலாம். ஆனால் குழந்தைகள் இதை பெரும்பாலும் விரும்பி சாப்பிடுவது கிடையாது. அதனால் முருங்கைக்கீரை அவர்களுக்கு எப்படி கொடுத்தால் அதை விரும்பி சாப்பிடுவார்கள் என்பதை பற்றியும் பார்க்கலாம்.

முருங்கைக்கீரையில் இருக்கும் எக்கச்சக்கமான சத்துக்கள்

அதாவது முருங்கைக் கீரையை நன்றாக கழுவி காயவைத்து அதை நல்லா சூடாக்கிய பிறகு அதை மிக்ஸியில் திரித்து பொடியாக்கி ஒரு டப்பாக்கள் போட்டு தோசை மாவில் ஒரு ஸ்பூன் கலந்து முருங்கைக்கீரை தோசையாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம். அல்லது நம் தினமும் சமைக்கும் உணவுகளில் ஒரு ஸ்பூன் முருங்கைக் கீரையை சேர்த்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

அத்துடன் முருங்கை கீரையை சூப்பு மாதிரியும் ரெடி பண்ணி அனைவரும் குடிக்கலாம். அப்படி முருங்கைக்கீரை சூப்பை குடித்தால் என்னென்ன நன்மைகள் என்பதை பார்க்கலாம். வெறும் வயிற்றில் ஜூசை குடித்தால் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் எதுவும் வராது. முருங்கை இலையில் நார் சத்துக்கள் அதிகமாக இருப்பதால் உடல் எடையை குறைத்து சீராக வைப்பதற்கு ரொம்பவே உதவியாக இருக்கும்.

அடுத்ததாக முருங்கைக்கீரை ஜூஸில் தேன் கலந்து ஒரு டம்ளர் குடித்து வந்தால் வயிற்றுப்போக்கு குணமாகும். சிறுநீர் எரிச்சல் சிறுநீர் கடுப்பை குணப்படுத்தும் விதமாக முருங்கைக்கீரை ஜூஸில் கேரட் சேர்த்து குடித்து வந்தால் தீராத வழி கூட தீர்ந்து போய்விடும். வாரத்தில் இரண்டு முறையாவது முருங்கை கீரை ஜூஸ் குடித்து வந்தால் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகள் குறைந்துவிடும்.

அத்துடன் ஆஸ்துமா, மார்சளி, சைனஸ் போன்ற சுவாசக் கோளாறுகளை முருங்கையின் சாறு நீக்குகிறது. ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது. ரத்த சோகையை விரட்டியடிக்கிறது. ரத்தத்தை சுத்தப்படுத்துவதுடன், எலும்புகளையும் பலப்படுத்துகிறது இந்த முருங்கை சாறு.

தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும். இப்படி இதனுடைய மகத்துவத்தை சொல்லிக் கொண்டே போகலாம். அந்த அளவிற்கு உடம்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு முருங்கை ஜூஸில் மாயமான மந்திரங்கள் நிறையாக இருக்கிறது. சத்தான உணவுகளை எடுத்து ஆரோக்கியமாக வாழலாம்.

உடலை ஆரோக்கியமாக வைக்க சில வழிமுறைகள்

Next Story

- Advertisement -