ஒரு நிமிட காட்சியால் மொத்த சோழியவும் முடிச்சுட்டாங்க.. அடப்பாவிகளா! விஜய்மில்டனுக்கு இப்படி ஒரு அநீதியா?

Vijay Antony: ஒரு படத்தில் வரும் காட்சி போல் எனக்கும் சம்பந்தமே இல்லை என்று இயக்குனர் பேட்டி கொடுத்தால் எப்படி இருக்கும். அதைத்தான் விஜய் மில்டன் செய்திருக்கிறார். மழை பிடிக்காத மனிதன் படத்தின் முதல் ஒரு நிமிடம் காட்சி தனக்குத் தெரியாமல் சேர்க்கப்பட்டு விட்டதாகவும், அந்த காட்சிக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை எனவும் மீடியா உண்டு பகிரங்கமாக பேட்டி கொடுத்திருக்கிறார்.

விஜய் ஆண்டனி, மேகா ஆகாஷ், சத்யராஜ் மற்றும் சரத்குமார் நடிப்பில் உருவான மழை பிடிக்காத மனிதன் படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. ஒரு இயக்குனர் தன் மனதில் இருக்கும் கதையை அப்படியே படமாக்கி அதை திரையில் ரசிகர்களை பார்க்க வைத்து ரசிப்பது தான் உண்மையிலேயே திருப்தி.

ஆனால் அந்த இயக்குனருக்கே தெரியாமல் அந்த படத்தின் மொத்த காட்சியையும் சொதப்பினால் எப்படி இருக்கும். அப்படி ஒரு விஷயம் தான் விஜய் மில்டனுக்கு நடந்திருக்கிறது. சரத்குமாரிடம் ஏஜென்ட் ஆக இருக்கிறார் விஜய் ஆண்டனி.

விஜய்மில்டனுக்கு இப்படி ஒரு அநீதியா?

அவருக்கு மழை பிடிக்காது, அவருடைய மனைவியை கொலை செய்து விடுவார்கள். இதை நோக்கி தான் படம் நகர்கிறது. படம் போகப் போக இதில் இருக்கும் ஒவ்வொரு சஸ்பென்சும் உடையும் விதமாக திரை கதையை அமைத்திருக்கிறார் விஜய் மில்டன்.

ஆனால் இந்த படத்தின் முதல் காட்சியில் கதாநாயகி யார், விஜய் ஆண்டனிக்கு ஏன் மழை பிடிக்காது என ஒட்டுமொத்த சஸ்பெண்ட் செய்யும் ஒரு நிமிஷத்தில் சொல்லி முடித்து விடுகிறார்களாம். இதனால் மொத்த திரை கதையும் சொதப்பிவிட்டது என விஜய் மில்டன் ரொம்ப பரிதாபமாக பேட்டி கொடுத்து இருக்கிறார்.

அது மட்டும் இல்லாமல் மழை பிடிக்காத மனிதன் படம் பார்க்க திரையரங்கிற்கு வருபவர்கள் தயவுசெய்து அந்த ஒரு நிமிட காட்சியை மறந்து விட்டு படம் பாருங்கள் என்று சொல்லி இருக்கிறார். பல நாட்களாக இரவு பகலாக உழைப்பு இப்படி ஒரு நிமிட காட்சியால் மொத்தமாய் சொதப்பியது அவருக்கு பேரிடியாய் அமைந்திருக்கிறது.

Next Story

- Advertisement -