நிதிநெருக்கடியில் சிக்கித்தவித்து வரும் மகாராஷ்டிரா அரசு ஒரு லீட்டர் பெட்ரோல் மீது 2 ரூபாய் கூடுதல் கட்டணத்தை விதித்துள்ளது. இதனால் மக்கள் அதிகளவில் பாதிக்கபடுகின்றனர். இம்மாநிலம் பெட்ரோல் விலையை உயர்த்தி வெறும் 1 மாதம் மட்டுமே ஆனா நிலையில் மீண்டும் இதன் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. ஏன் இந்த நிலை..? என்ன காரணம்..? தமிழ்நாட்டிலும் இதே நிலை தொடருமா..?

விலை குறைப்பு

செவ்வாய்க்கிழமை மத்திய அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு 2.16 ரூபாய்க் குறைப்பதாக அறிவித்த நிலையில், இப்புதிய கட்டண அறிவிப்பை மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவிலேயே இங்குதான் காஸ்ட்லி

இதன் மூலம் மும்பையில் ஒரு லீட்டர் பெட்ரோல் விலை தற்போது 76.91 ரூபாய் என்ற நிலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இங்குதான் நாட்டிலேயே அதிக விலையில் பெட்ரோல் விற்பனை செய்யப்படுகிறது.

 

மகாராஷ்டிரா அரசு

மகாராஷ்டிரா தற்போது அறிவித்துள்ள கட்டணத்தையும் சேர்த்து ஒரு லீட்டருக்கு 11 ரூபாய் கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதனுடன் மும்மையில், தானே, நாவி மும்பை பகுதிகளில் 26 சதவீதம் வாட் வரி, மாநிலத்தின் பிற பகுதிகளில் 25 சதவீத வாட் வரி ஆகியவை வசூலிக்கப்படுகிறது.

கூடுதல் வருமானம்

இதன் மூலம் இம்மாநில அரசுக்குக் கூடுதலாக வருடத்திற்கு 700 கோடி ரூபாய் வருமானம் அதிகரிக்கும் என இம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

என்ன காரணம்

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக மதுபானத்தின் மீது விதிக்கப்படும் கலால் வரி மற்றும் வீட்டுப் பதிவில் கிடைக்கப்படும் முத்திரைதாள் கட்டணம் ஆகியவற்றில் இருந்து கிடைக்கும் வருமானம் அதிகளவில் குறைந்த காரணத்தால் பெட்ரோல் மீதான கட்டணத்தை உயர்த்தியுள்ளது.

தற்போது இம்மாநிலத்தில் ஏற்பட்டுள்ள நிதிநெருக்கடியை சமாளிக்க உடனடி தீர்வாகப் பெட்ரோல்-ஐ கையில் எடுத்துள்ளது.

 

டீசல்

அதேபோல் தனது விற்பனையைப் பிற மாநிலங்களுக்கு இழக்க கூடாது எனத் திட்டமிட்டு மகாராஷ்டிரா மாநிலம் டீசல் மீது எவ்விதமான கட்டண உயர்வையும் அறிவிக்கவில்லை.

தமிழ்நாடு

இந்நிலையில் தமிழ்நாட்டிலும் டாஸ்மாக் மீது தொடர்ந்து மக்கள் எதிர்த்து வரும் காரணத்தால் தமிழக அரசு இதே முறையைக் கையாளும் எனத் தெரிகிறது.

இன்றைய நிலவரம்

மத்திய அரசின் விலை குறைப்பிற்குப் பின் தமிழ்நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் 68.26 ரூபாயாகவும், டீசல் 58.07 ரூபாயாகவும் உள்ளது.