ஜியோவினால் இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் ஏற்பட்ட புரட்சியானது இப்போது ஜியோவிற்கே எதிர்வினையை வந்து நிற்கிறது. அரசு நடத்தும் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் அதன் வாடிக்கையாளர்களுக்கு தவிர்க்கவே முடியாத திட்டங்களை வழங்கியுள்ளது.

இந்த அதிரடியான அதிவேக டேட்டா திட்டங்களின் மூலம் ஜியோ சேவைக்கு மாறலாமா அல்லது பிஎஸ்என்எல் உடன் நீடிக்கலாமா.? என்ற குழப்பத்தில் இருந்தவாடிக்கையாளர்களுக்கு ஒரு தெளிவு பிறக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.!

நேற்று (வெள்ளிக்கிழமை) பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் விலை வரம்பிலான (மலிவான) மூன்று புதிய திட்டங்களை அறிவித்தது. அந்த மூன்று திட்டங்களில் ஒன்று ஜியோ மட்டுமின்றி இதர அனைத்து நிறுவனங்களுக்கும் கடும் போட்டியாக திகழ்கிறது.

ரூ.333/- முதல் ரூ.395 என்ற வரம்புக்குள் வெளியாகியுள்ள மூன்று திட்டங்களில் ட்ரிபிள் ஏஸ் திட்டமானது நாள் ஒன்றுக்கு 3 ஜிபி அளவிலான தரவு மற்றும் வரம்பற்ற அழைப்புகள் ஆகிய நன்மைகளை வழங்குகிறது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ரூ.309/- திட்டம் இதன் முன் ஒன்றுமே இல்லை.

90 நாட்களுக்கு செல்லுபடியாகும் என்று நிறுவனம் தெரிவித்துள்ள இந்த திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் 270ஜிபி அதிவேக 3ஜி தரவை ரூ.333/-க்கு பெற முடியும் அதாவது 1ஜிபி டேட்டாவிற்கு 1 ரூபாய் 23 பைசா என்ற விலை நிர்ணயத்தில் பெற முடியும்.

இந்த திட்டத்துடன் சேர்ந்து தில் கோல் கே போல் (எஸ்ஸ்டிவி349) மற்றும் டெஹ்லா பெர் (எஸ்டிவி395) என்ற இரண்டு ஹார்ட்கோர் இணைய பயனர்களுக்கான திட்டமும் நேற்று (வெள்ளிகிழமை) அறிமுகமானது.

ஜியோவின் தண் தணா தண் சலுகையை குறிவைத்து வெளியாகியுள்ள தில் கோல் கே போல் திட்டத்தின் கீழ் பயனர்கள் இப்போது நாள் ஒன்றிற்கு 2 ஜிபி அளவிலான தரவை பெற முடியும், உடன் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளையும் நிகழ்த்த முடியும்.

டெஹ்லா பெர் ரூ.395/- திட்டத்தின் கீழ் நாள் ஒன்றிற்கு 2ஜிபி அளவிலான டேட்டா உடன் 3000 நிமிடங்களுக்கான பிஎஸ்என்எல் டூ பிஎஸ்என்எல் இலவச நிமிடங்களை வழங்குகிறது மேலும் சுவாரஸ்யமாக மாதம் ஒன்றுக்கு 180 நிமிடங்கள் ஆஃப்-இன்-இன்டர்நெட் குரல் அழைப்புகளையும் ஒரு மாதத்திற்கு வழங்கிறது. அதாவது 71 நாட்கள் அல்லது 10 வாரங்கள் செல்லுபடியாகும் இந்த திட்டத்தின் கீழ் பயனர்கள் நிமிடத்திற்கு 20 பைசா என்ற ஆஃப்-நெட் குரல் அழைப்பு கட்டணத்தை செலுத்துவார்கள் என்று அர்த்தம்.

மறுபக்கம் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், ஐடியா மற்றும் வோடபோன் ஆகியோரால் வழங்கப்படும் 4ஜி சேவை உடன் ஒப்பிடும்போது, இந்த திட்டத்தில் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் 3ஜி வேகத்தில் வரம்பிடப்படுவார்கள் மற்றும் உங்கள் பிராந்தியத்தில் பிஎஸ்என்எல் 3ஜி தரவு வேகம் போதுமானதாக இருந்தால், இது ஒரு சூப்பர் ஆபர் என்பதில் சந்தேகமே இல்லை.

மேலும் மறுசீரமைக்கப்பட்ட பிஎஸ்என்எல் திட்டமான ரூ.339/-ன் கீழ் இப்போது நாள் ஒன்றிற்கு 3ஜிபி அளவிலான டேட்டாவை பயனர்களால் பெறமுடியும். ஒரு மாத காலம் செல்லுபடியாகும் இந்த திட்டத்தின் கீழ் முன்பு 28 நாட்களுக்கு 2ஜிபி அளவிலான தரவு உடன் எந்த நெட்வொர்க் உடன் வரம்பற்ற அழைப்புகளை வழங்கிய ரூ.339/- திட்டம் இப்போது, ஒரு தினசரி 3ஜிபி தரவு எல்லை பயன்பாடு தொப்பி கொண்ட, எந்த நெட்வொர்க் உடனான வரம்பற்ற அழைப்புகளையும் வழங்கும்.