India | இந்தியா
மயிரிழையில் உயிர் தப்பிய கமலஹாசன்.. காப்பீடு இல்லாததால் கோடியில் இழப்பீடு
சினிமா துறையில் கடைநிலை ஊழியர்களுக்கு காப்பீடு இல்லாதது அவமானமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார் கமலஹாசன்.
நேற்று இந்தியன்-2 படப்பிடிப்பில் நடந்த விபத்தில் உயிரிழந்த 3 பேரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய கமல்ஹாசன். காப்பீடு இல்லாதது மிகுந்த வருத்தம் அளிப்பதாக தெரிவித்த மட்டுமல்லாமல் இந்த இழப்பு என் குடும்பத்தில் நடந்ததாக கருதுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
இதுமட்டுமல்லாமல் 100 கோடி 200 கோடி கலெக்சன் என்று மார்தட்டிக்கொள்ளும் சினிமாத்துறையில் கடைநிலை ஊழியருக்கு காப்பீடு இல்லாதது மிகுந்த அவமானமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். விரைவில் இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
நானும் 4 நொடிகளில் உயிர் தப்பினேன் என்று கூறிய கமல்ஹாசன் உயிரிழந்த குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடாக தருகிறேன் என்று தெரிவித்துள்ளார். அரசியல் தாண்டி சினிமா துறையில் தலை நிமிர்ந்து நிற்கும் கமலஹாசனின் இந்த செயலைப் பார்த்து சமூக வலைத்தளத்தில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
