லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் கரு படத்தில்  நாயகியாக  சாய் பல்லவி, நான்கு வயது குழந்தையின் அம்மாவாக  நடிக்கிறார். இவருடன் நாக சௌர்யா, வெரோனிகா அரோரா, ஆர்.ஜே.பாலாஜி ஆகியோரும் நடிக்க,விக்ரம் வேதா புகழ் சாம்.சி.இசை அமைக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘வனமகன்’ படத்தை தொடர்ந்து ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள படம்.

இப்படத்தின் டிரைலர் மாலை 5 மணிக்கு பிரபு தேவா வெளியிட்டார்.

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்

கரு கலைப்பு சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்தும் கதையை கொண்ட படம் இது என்று கூறப்பட்டு வந்த நிலையில் ட்ரைலர் பார்த்த உடன் இது எதோ திரில்லர் வகையறா படம் என்று உறுதியாக சொல்லமுடிகிறது.