செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

புஷ்பா 2 படத்தின் அடுத்த சாதனை.. ஆனாலும் கூட.. அதிருப்தியில் ரசிகர்கள்

புஷ்பா 2 படத்தை தான் அடுத்ததாக ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த வருடம் கடைசியாக வெளியாகப்போகும் பெரிய பட்ஜெட் படமும் இது தான். தற்போது இந்த படத்தின் ப்ரோமோஷன் படு பயங்கரமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில், படத்துக்குள் ஏகப்பட்ட குழப்பங்களும் ஏற்பட்டுள்ளது. இசைமைப்பாளர் DSP ஒழுங்காக வேலை செய்யவில்லை. பின்னணி இசை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று கூறி ஒரு சர்ச்சையானது. இந்த நிலையில், படத்தில் சாம் சி.எஸ். உட்பட 4 இசையமைப்பாளர்கள் இசைமைக்கிறார்கள். இப்படி இருக்க, சமீபத்தில் DSP மேடையில் வைத்தே தயாரிப்பாளருக்கு எதிராக பேசி அதிரவிட்டிருந்தார்.

அதிருப்தியில் ரசிகர்கள்..

இதை தொடர்ந்து DSP-யை குட் பேட் அக்லீ படத்திலிருந்து DSP-யை நீக்கியதாக கூறப்படுகிறது. இதற்க்கு நடுவில், படத்தின் கிஸ்ஸிக் பாடல் வெளியாகி அதிக பார்வையாளர்களை பெற்று வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 42 மில்லியன் பார்வையாளர்களை இந்த பாட்டு கடந்துள்ளது. இது மிகப்பெரும் சாதனையாகவே பார்க்கப்படுகிறது.

இருந்தாலும் கூட, பாடல் மக்களிடம் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்று தான் கூறியாகவேண்டும். இந்த பாடலில் சமந்தா வேண்டும் என்றும் மக்கள் தற்போது கமெண்ட் செய்து வருகின்றனர். புஷ்பா 1 வெற்றி பெற ஊ சொல்றியா மாமா பாடல் முக்கியமான காரணமாக இருந்தது. இந்த பாடலில் சமந்தா ஆட்டம் பட்டிதொட்டியெங்கும், இளசுகள் முதல் பெருசுகள் வரை வைப் செய்ய வைத்தது.

இப்படி இருக்க, இந்த பாடல், இத்தனை மில்லியன் பார்வைகளை பெற்றபோதும் கூட, ஊ சொல்றியா மாமா பாடல் ஏற்படுத்திய effect-ஐ ஏற்படுத்தவில்லை. அந்த அளவுக்கு இல்லை என்று தான் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

- Advertisement -

Trending News