Gossip : நடிகை அடுத்தடுத்த காதல் தோல்வியால் மிகுந்த மனவேதனையில் இருக்கிறார். அழகும், திறமையும் உடைய நடிகையை தென்னிந்திய சினிமா பெரிய அளவில் கொண்டாட தவறியது என்று தான் சொல்ல வேண்டும்.
மேலும் சில படங்களில் நடித்தாலும் அவருக்கு நல்ல பெயர் கிடைத்தது. இந்நிலையில் வாரிசு நடிகரும், இவரும் நெருங்கி பழகி வந்தனர். ஆனால் நடிகரின் குடும்பம் இதற்கு முட்டுக்கட்டை போடவே நடிகை கழட்டி விட்டு விட்டார் வாரிசு.
இதனால் மிகுந்த மனவேதனையில் இருந்த நடிகை சில காலம் சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். பின்பு எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு இப்போதுதான் படங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.
காதல் தோல்வியால் மன வேதனையில் இருக்கும் நடிகை
அதுவும் அவரது கவர்ச்சி தாராளமாக இருந்து வருகிறது. தன்னுடன் வெப் தொடரில் நடித்த ஹீரோவுடன் நெருக்கமான காட்சியில் நடித்திருந்தார். இதன் மூலம் சீரிஸில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் இந்த ஜோடிக்கு கெமிஸ்ட்ரி சூப்பராக ஒர்க் அவுட் ஆகிவிட்டது.
எங்கு சென்றாலும் இருவரும் ஒன்றாகத்தான் சென்றனர். அதோடு ஊடகங்களிலும் இவர்களது உறவை வெளிப்படுத்தி இருந்தனர். விரைவில் திருமண தேதியை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்த்தால் ஹீரோ நடிகை கழட்டி விட்டு விட்டாராம்.
அதாவது வேறு ஒரு இளம் நடிகையுடன் இவர் பழகி வருவது நடிகை காதுக்கு சென்று இருக்கிறது. இதனால் வாக்குவாதம் பெரிதாக நீ வேண்டாம் என்று ஹீரோ நடிகையை கழட்டி விட்டார் என்று கோலிவுட் வட்டாரத்தில் தீயாய் செய்தி பரவி வருகிறது.