சனிக்கிழமை, மார்ச் 15, 2025

அப்பா கமலிடம் வேண்டாம் என்று சொன்ன அக்க்ஷரா.. பழைய ரெக்கார்டை பார்த்துட்டு சண்டை போடும் வாரிசுகள்

Actor Kamal haasan daughter akshara warned his father about his produced films: கடந்த 2022 இல் விக்ரமின் வெற்றிக்குப் பின் கமல் சில படங்களில் நடித்து வருகிறார். அது தவிர இளம் தலைமுறையை ஊக்குவிக்கும் வண்ணம்  இயக்குனர்கள், நடிகர்கள் என பலரின் முயற்சிக்கு தூண்டுகோலாக சில திரைப்படங்களை தயாரித்து வருகிறார். உதாரணமாக சிம்பு 48, எஸ் கே 21 போன்ற படங்கள் கமலின் தயாரிப்பில் உருவாகி வருகின்றது.

பத்து தல, வெந்து தணிந்தது காடு போன்ற வெற்றி படங்களுக்கு பின் நல்ல கதை, நல்ல திரைப்படம் வேண்டுமென்று தேடலோடு இருந்த சிம்புவுக்கு  தேசிங்கு பெரியசாமியின் சரித்திர கதை கிளிக்கானது, இதுவே சிம்பு 48. கதையால் ஈர்க்கப்பட்ட கமலஹாசன் தானாக முன்வந்து தயாரிக்க ஓகே சொன்னார்.

தயாரிப்பாளர் என்ற முறையில் தேசிங்கு பெரியசாமிக்கு பல  நல்ல அட்வைஸ் களை வழங்கி உள்ளார் கமல். அதாவது  தற்போது வெளிவரும் படங்கள் பான் இந்தியா மூவியாக வெளியாகும் நோக்கில் பல மொழிகளிலும் உள்ள முன்னணி நடிகர்கள் பலரை படத்திற்குள் நுழைத்து விடுகின்றனர். இந்த நோக்கம் தேவையில்லை எனவும், கதைக்கு தேவை படுவதை மட்டுமே செய்தால் போதும் என்று கூறி உள்ளாரம் கமல். இந்த உயரிய சிந்தனைக்கு கண்டிப்பாக ஒரு சபாஷ் போட்டே தீரவேண்டும்.

Also read: கமல் நடிக்க ஆசைப்பட்ட 4 படங்கள்.. மணிரத்தினத்தின் மூன்று படங்களை தவற விட்ட ரங்கராய நாயகன்

இப்படி பல அட்வைஸ்களை வாரி வழங்கிய கமல் படத்திற்கு தாராளமாக செலவு செய்கிறார் என்று அவரது மகள் அக்சரா ஹாசன் மற்றும் ஸ்ருதிஹாசன் அவர்கள் வேதனையில் உள்ளனர். சிம்புக்காக புரொடக்ஷன் பணிகளில் பணத்தை தண்ணி போல் வாரி இறைத்து வருவதாக சகோதரிகள் புலம்பி வருகின்றனர்.

பலரும் கூறுவது போல் சிம்பு அவர்கள் விழா ஒன்றில் ரசிகர்களிடம் “படத்துல நடிக்க ஒழுங்கா வாரேன்னா, இல்லையான்னு பார்க்காதீங்க! படத்துல ஒழுங்கா நடிக்கிறநான்னு பாருங்க” என்று பன்ச் பேசி பஞ்சர் ஆகி போயிருந்தார்.

இப்படி பேசும் சிம்பு, பழைய படங்களின் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் அவர் நடந்து கொண்ட முறைகளை பற்றியும், சூட்டிங் சரியாக வராமல் அழிச்சாட்டியம் பண்ணிய விவரங்களையும் கூறி கமலை கவனமாக இருக்க சொல்லி உள்ளாராம் அக்சரா. மேலும் இதனை சாருஹாசன் மற்றும் சுகாசினிடம் முறையிட்டாராம் அக்சரா. குடும்பம் மொத்தமும்  பார்த்து சூதானமா நடந்துக்கோனு கமலுக்கு அட்வைஸ் பண்ணி வருகின்றார்களாம்.

Also read: சிம்புவை நம்பி கடைசி வரை எடுக்க முடியாமல் போன 5 படங்கள்.. 25வது படத்தை கைவிட்ட கெட்டவன்

Trending News