தீய பழக்கங்களால் சாவின் விளிம்பிற்கு சென்ற 5 நடிகைகள்.. இந்த ஒரு நோயால் இறந்து போன ஶ்ரீவித்யா

சினிமாதுறையில் உடல்நலகுறைவு ஏற்பட்டு ஒருவர் இறப்பது சாதாரண விஷயம். ஆனால் ஒரு கொடிய குணப்படுத்த முடியாத கேன்சர் போன்ற நோய்கள் தாக்கி சிறு வயதிலேயே சிரமப்பட்ட சில நடிகைகளையும் அவர்களை தாக்கிய கொடிய நோய்களைப் பற்றியும் தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும், ரஜினி, கமல், கார்த்திக் போன்ற முன்னணி நடிகர்களோடு நடித்து பெயர் பெற்ற நடிகை கவுதமிக்கு தனது 35 ஆவது வயதில் மார்பக புற்றுநோய் ஏற்பட்டது. அவரின் வாழ்க்கையை அப்படியே புரட்டிப்போட்டு விட்டது. இதிலிருந்து மீண்டு வர மிகுந்த சிரமம் அடைந்து பின் தேறி வந்தார்.

தமிழில் காதலர் தினம், கண்ணோடு காண்பதெல்லாம், போன்றப் படங்களில் கதாநாயகியாக நடித்த சோனாலி இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், என பல மொழிப்படங்களில் நடித்து புகழ் அடைந்தவர். இவர் தன்னுடைய 34 வது வயதில் மெட்டாஸ்டாட்டிக் கேன்சரால் பாதிக்கப்பட்டு 2018 ஆம் ஆண்டு படுத்த படுக்கை ஆனார். அவர் அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். அதன் பின் அவர் மீண்டு வந்த கதையை ஒரு படமாகவே எடுக்கலாம் என்று அவர் கூறி இருந்தார். அவ்வளவு போராட்டங்களை சந்தித்து இருக்கின்றார்.

இந்திய திரையிலகில் முன்னணி நடிகையாகவும், தமிழில் உயிரே, இந்தியன், முதல்வன், பாபா போன்ற படங்களில் கதாநாயகியாகவும், தனுஷின் மாப்பிள்ளை படத்தில் தனுஷின் மாமியார் கதாப்பாத்திரத்திலும் நடித்தவர் தான் மனிஷா கொயிராலா. தமிழில் நல்ல வரவேற்பு பெற்ற நடிகையாக வலம் வந்தவர்.

இவருக்கு தன்னுடைய 39 வது வயதில் தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சாவின் விளிம்பிற்கு சென்று திரும்பினார். இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கக்கூடியவர். அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு போராடிய காலங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வந்தார்.

இந்திய நடிகையும், படத்தயாரிப்பாளரும், பாடகியுமான மம்தா மோகன்தாஸ் தமிழில் சிவப்பாதிகாரம், குரு என் ஆளு போன்ற படங்களில் நடித்து இருக்கிறார். மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் பல படங்களையும் தயாரித்து இருக்கிறார். இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு ஹாட்ஜ்கின் லிம்பிஹோம் என்ற புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அதன் பின் 2014 ஆம் ஆண்டு அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று குணமானார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னக மொழிகளில் நடித்து கொடி கட்டி பறந்த நடிகைதான் ஶ்ரீவித்யா. அந்தச் சிறப்புமிகு நடிகை தண்டுவட புற்று நோயால் பாதிக்கப்பட்டு நோய் முற்றியதால் அவர் இறுதியில் அக். 19 அன்று மறைந்தார். மறையும் போது அவருக்கு வயது 53.

தன்னுடைய 13வது வயதில் ‘திருவருட்செல்வர் படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் ஸ்ரீவித்யா நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கமல், ரஜினி, விஜயகாந்த், சரத்குமார், பிரபு, விஜய், அஜித் உள்ளிட்ட பல நடிகர்களுடன் சுமார் 900க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நாம் பார்த்த இந்த வரிசையில் நோயால் பாதிக்கப்பட்டு போராடி வென்றவர்களை பார்த்தோம். ஆனால் இவர் இறந்து விட்டார். இருந்தும் மிகுந்த போராட்டமும் மர்மமும் நிறைந்த மரணமாக இது இருந்தது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்